தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 1000 நபர்களுக்கு புத்தாடை சட்டமன்ற உறுப்பினர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபடக் கூடிய துப்புரவு பணியாளர்களுக்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தனது சம்பளத்திலிருந்து 1000 தூய்மை 7 லட்சம் மதிப்புள்ள புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி கவுரவித்தார் .அதைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாக்கின்றனர் . ஆனால் தூய்மை பணியாளர்களாக தூய்மை பணியில் ஈடுபடக் கூடிய நீங்கள் நகர மற்றும் கிராம பகுதிகளில் டெங்கு மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பாதுகாத்து வருகிறார்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார தீபாவளி முடிந்தவுடன் உங்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் .இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் நகர செயலாளர் ராமமூர்த்தி மற்றும் மணிகண்டன் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.துய்மை பணியில் ஈடுபடக் கூடிய தூய்மைப் பணியாளர்கள் புத்தாடை இனிப்பு வழங்கி வழங்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்