Home செய்திகள் ஆசை வார்த்தை கூறி பண மோசடி;கூகுள் பே மூலம் ஏமாற்றியவர் கைது..

ஆசை வார்த்தை கூறி பண மோசடி;கூகுள் பே மூலம் ஏமாற்றியவர் கைது..

by mohan

லோன் வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த செல்வம் என்ற நபரின் முகநூல் பக்கத்தில் இருந்து அவரது தொலைபேசி எண்ணை எடுத்து அவருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நபர் 4 லட்சம் ரூபாய் லோன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கூகுள் பே மூலம் ரூபாய் 40,000 வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார். இது குறித்து செல்வம் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுறுத்தலின் பேரில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி வழக்கு பதிவு செய்து எதிரியின் தொலைபேசி எண் மற்றும் வங்கி விபரங்களை வைத்து முகவரியை கண்டறிந்ததில் மேற்படி மோசடியில் ஈடுபட்டது இடையர்பாளையம் பாரதியார் தெருவைச் சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் கார்த்திகேயன் என்பது தெரிந்தது. இந்த நிலையில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் எதிரியை தேடி வந்த நிலையில் கோயம்புத்தூரில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை சார்பு ஆய்வாளர் மாதவன், தலைமை காவலர் கோபி மற்றும் காவலர் முத்துக்குமார் ஆகியோர் எதிரியை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து பின்பு சிறையில் அடைத்தனர்.மேலும் கார்த்திகேயன் இது போல் பலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை கூறி பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!