மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் JCB இயந்திரங்களை கொண்டு அகற்றினர்.

உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிளுக்கு தமிழக அரசு கொரோனா தளர்வுகளை அமல்படுத்தியதையடுத்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை அதிகரித்தும், சுற்றுலா பயணிகளும் வருகை அதிகரித்தும் காணப்பட்டு வருகிறது.குறிப்பாக மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் 1000க்கும் அதிகமான கடைகள் உள்ளது. இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடக்க கூடிய நடைபாதையில் ஆக்கிரமித்தும் இடையூறாக பல்வேறு கடைகளால் பக்தர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில்,தொடர்ந்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி, மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் நான்கு சித்திரை வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறை உதவியுடன் JCB இயந்திரம் மூலம்அகற்றபட்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்