Home செய்திகள் உசிலம்பட்டியில் ஆடிபெருக்கு தினத்தை குலதெய்வ கோயில்களில் தாய்மாமன் தினமாக கொண்டாடி வரும் விநோத வழிபாட்டு முறை நடைபெற்றது.

உசிலம்பட்டியில் ஆடிபெருக்கு தினத்தை குலதெய்வ கோயில்களில் தாய்மாமன் தினமாக கொண்டாடி வரும் விநோத வழிபாட்டு முறை நடைபெற்றது.

by mohan

மலைக்கு சென்றாலும் மாமன் மச்சான் வேண்டும் என்பர். உசிலம்பட்டி பகுதியில் திருமணவிழா, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, போன்ற விழாக்களில் தாய்மாமன் முதலில் மாலை அணிவித்த பின்னரே இந்த நிகழ்ச்சிகள் தொடங்கும். அந்த அளவிற்கு குறிப்பிட்ட (கள்ளர்) சமுதாய மக்கள் தாய்மாமனுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் ஆடி 18ம் பெருக்கு நாளை தாய்மாமன் தினமாக கொண்டாடி வருகின்றனர். உசிலம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற குலதெய்வ கோவில்களில் ஆடிபெருக்கு தாய்மாமன் தினத்தை முன்னிட்டு தாய்மாமன் மடியில் குழந்தையை உட்காரவைத்து மொட்டையடித்து நேர்த்திகடன் செலுத்தும் விநோத வழிபாட்டு முறை இன்றும் கடைபிடிக்கப்ட்டு வருகிறது. உசிலம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வீரா கோவில், ஒச்சாண்டம்மன கோவில், கருப்பு கோவில், மூனுசாமி கோவில், ஆதிசிவன் கோவில், அங்காளபரமேஸ்வரி கோவில் போன்ற கோவில்களில் இன்று ஆடிபெருக்கை முன்னிட்டு தாய்மாமன் தினம் கொண்டாடப்பட்டது.இந்த வழக்கமுறை உசிலம்பட்டி பகுதியில் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் ஆடிபெருக்கு அன்று நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்த தாய்மாமன் தினமாக உசிலம்பட்டி பகுதியில் கருதப்படுகிறது.

உசிலைசிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!