இராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று (15.04.2018) இராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஷ்மீரில் 8 வயது  சிறுமி ஆஷிபாவை கற்பழித்து கொலை செய்த கயவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும், இது போன்ற குற்றங்கள் புரியோரை தண்டிக்கும் விதமாக கடுமையான  தண்டனைகள் இயற்றப்பட வேண்டுமென்றும் கண்டன  கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்வர் அலி தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் அப்பாஸ் முன்னிலை வகித்தார் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஜஹாங்கிர், பொருளாளர் பரக்கத் துல்லாஹ் மற்றும் 100 க்கும் மேற்பட்ட த மு மு க கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புகைப்படத்தொகுப்பு