Home செய்திகள் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “29 வது பட்டமளிப்பு விழா”

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “29 வது பட்டமளிப்பு விழா”

by ஆசிரியர்

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் “29 வது பட்டமளிப்பு விழா” நிகழ்ச்சி அறக்கட்டளை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இயக்குநர் ஹபீப் முஹம்மது தலைமை வகித்தார். இராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி முன்னிலை வகித்தார். கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் கல்லூரியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 563 பட்டதாரிகளுக்கு பட்டங்களை VICE CHAIRMAN, AICTE, NEWDELHI, முனைவர் புனியா கலந்து கொண்டு வழங்கினார். மேலும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இன்றைய காலக்கட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பொறியியல் படித்த மாணவர்களுக்கு மிகுந்த வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்து வருகின்றது. இத்தருணத்தில் மாணவர்களாகிய உங்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளது. நம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 6 சதவீத மக்கள் மட்டுமே உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். ஆகவே மாணவர்களாகிய நீங்கள் இளநிலை பட்டம் பெற்றதோடு நின்று விடாமல் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றால் நீங்கள் உலகெங்கிலும் அனைத்து துறையிலும் சிறந்து விளங்கலாம் என்று கூறினார்.

மேலும் இராமநாதபுரம் மாவட்டம் முன்னாள் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த மண் ஆகையால் இங்கு பயிலும் மாணவர்கள் அனைவரும் மிகுந்த அறிவுத்திறன் மிக்கவர்களாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களை பாராட்டுகிறேன்.

இளைநிலை பொறியியல் பட்டங்களை 446 மாணவ, மாணவிகளும் முதுநிலை பொறியியல் பட்டங்களை 117 மாணவ, மாணவிகளும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினரிடம் பட்டங்களை பெற்றனர். இதில் 42 மாணவஇ மாணவிகள் அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் அதில் கடல் சார் பொறியியல் துறை மாணவர்கள் 1 தங்கம் 1 வெள்ளி பதக்கங்கள் பெற்று மாநில அளவில் முதல் கல்லூரியாக விளங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழக அளவில் தங்கம் பெற்ற கடல் சார் பொறியியல் துறை மாணவர் விக்னேஸ்வரன் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு முஹம்மது சதக் அறக்கட்டளை ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தது.

​விழாவில் முஹம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரஜபுதீன், முஹம்மது சதக் தஸ்தஹீர் மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர். நந்தகோபால், முஹம்மது சதக் CBSE முதல்வர் புரோஸ் மற்றும் B.Ed கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!