Home செய்திகள் கீழக்கரையில் நோக்கம் நிறைவேறாமல் மூடிக் கிடக்கும் அம்மா மருந்தகம்..

கீழக்கரையில் நோக்கம் நிறைவேறாமல் மூடிக் கிடக்கும் அம்மா மருந்தகம்..

by ஆசிரியர்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு முன்பு ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் அம்மா மருந்தகம் 85 இடங்களுக்கு மேலாக தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை மூலம் திறக்கப்பட்டு, ஏழை மக்களால் பாராட்டுதலையும் பெற்றது. மேலும் வறியவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கத்தால் அத்தியாவசிய மருந்துகளான சர்க்கரை நோய் போன்றவைகளுக்கு 12 முதல் 15 சதவீதம் தள்ளுபடி சலுகையும் வழங்கப்பட்டது.

ஆனால் பரிதாபம், எல்லா அறிவிப்புகள் கீழக்கரை மக்களுக்கு எந்த பலனும் இல்லாமல் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில், நாடார் பேட்டை பள்ளி அருகில் உள்ள அம்மா மருந்தகம் கடந்த மூன்று மாதங்களாக மூடிய வண்ணமே உள்ளது. திறப்பு விழாவுக்கு முந்திக்கொண்டவர்கள் அந்த மருந்தகம் தடங்கல் இல்லாமல் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

மக்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அரசாங்கம், உயிர் காக்கும் மருந்தகத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையான விசயம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!