Home செய்திகள்கீழக்கரை செய்திகள் 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பா??? அலைபேசி எடுக்கவில்லை என புகார்..

108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பா??? அலைபேசி எடுக்கவில்லை என புகார்..

by ஆசிரியர்

108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பா??? அலைபேசி எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.  பிரசவ வலியில் தவித்த பெண் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இன்று காலை(06/05/2020) முதல் 108 அவசரகால அழைப்புகள் எதுவும் எடுக்கவில்லை என பல இடங்களில் புகார் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை மதுரை மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு பெண் பிரசவ வலியில் துடித்த வருவதாகவும் அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி தேவை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து துரிதமாக செயல்பட்ட மதுரை நகர காவல் துறையினர் மதுரை நேதாஜி டிரஸ்ட் ஆம்புலன்ஸ் அமைப்புக்கு தந்த தகவலின் அடிப்படையில் மதுரை வில்லாபுரம் நகரில் உள்ள ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி என்று  விரைந்த பொழுது அங்கு அவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்து  தெற்கு வாசலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின் அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

தாயும் சேயும் நலமாக உள்ளார்கள் என தகவல் தெரிவித்து உள்ளார்கள். தகவலறிந்து விரைந்து செயல்பட்ட மதுரை மாநகர காவல் துறையினரும் மற்றும் தனியார் ஆம்புலன்ஸால் இரு உயிர்கள் காப்பாற்றப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்கள் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!