Home செய்திகள் கொரோனா வதந்தி: திருதணிக்காசலம் கைது! தொடர்ந்து இவரது பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி வந்த சமூக ஆர்வலர் “தக்கலை ஆட்டோ கபீர்” தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்..

கொரோனா வதந்தி: திருதணிக்காசலம் கைது! தொடர்ந்து இவரது பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி வந்த சமூக ஆர்வலர் “தக்கலை ஆட்டோ கபீர்” தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்..

by Askar

கொரோனா வதந்தி: திருதணிக்காசலம் கைது! தொடர்ந்து இவரது பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி வந்த சமூக ஆர்வலர் “தக்கலை ஆட்டோ கபீர்” தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்..

இதற்கு முன்னர் கீழை நியூஸ் வழியாக ஆட்டோ கபீர் சித்த மருத்துவர் தணிக்காசலம் சம்பந்தமாக பல விஷயங்களை தோலுரித்து காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தணிகாசலம் கைது செய்யப்பட்ட நிலையில் கீழை நியூஸுக்கு பேட்டியளித்த சமூக ஆர்வலர் தக்கலை ஆட்டோ கபீர் கூறும்போது,

சந்தர்ப்ப சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றி பல ஏமாற்றுக்காரர்கள் தோன்றுவார்கள் என நாம் அறிவோம், அது எல்லாதுறையிலும் இருக்கும்.

இதன் மூலம் அந்த ஏமாற்றுக்கரனின் பெயர் பிரபலமடையும், பணம் கொட்ட வாய்ப்பும் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையே இதுபோல பல போலிகள் உருவாக காரணமாக அமைகிறது.

இதே போல மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை, ஹீலர் பாஸ்கர், என தொடங்கி தற்போது திருத்தணிகாசலம் என்ற போலி டாக்டர் வரை பல ஏமாற்றுகாரர்கள் மக்களின் அறியாமையை தனக்கு சாதமாக்கின்றனர்.

உலகை அச்சுறுத்திய கொரானா வைரஸை தடுக்க தன்னிடம் மருந்து உண்டு என கூறிய போலி வைத்தியர் தனிகாசலம், தனக்கு சாதகமான மக்களை தக்கவைக்கவும், ஊரே கொரனாவில் பயந்து கிடக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணம் பார்க்கவும் பல பொய் செய்திகளை நாளுக்கு நாள் தனது பேஸ்புக்கிலும், யூடியூபிலும் பதிவிட்டு மக்களை குழப்பத்திற்கு மேல் குழப்பம் செய்து வந்தார்.

இந்த தனிகாசலம் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் இரவு நேர நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்களுக்கு இயல்பாக தோன்றும் சில பாலியல் அச்சத்தை பெரிதாக்கி இவரிடம் மூன்றுமாதம், ஆறு மாதம் மருந்து எடுத்தால் எல்லாம் சரியாகும் என நிகழ்ச்சி நடத்தினார்.

பின்னர் பாலியல் துறை டாக்டர் காமராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சி வந்த உடன் இவர் காணாமல் போனார். மீண்டும் தனது பெயர் நிலைத்திருக்க எடுத்த கற்பனை கதை தான் கொரானா மருந்து.

SARS-CoV-2 என்பது கொரனா குடும்பத்தில் உள்ள வைரஸ் இதற்கு மறு பெயர் தான் “COVID-19”

சனவரி கடைசியில் இந்தியாவில் கேரளாவில் தான் முதன் முதலில் சீனாவில் வந்த மருத்துவ மாணவி மூலமாக COVID-19 நுழைந்தது, பின்னர் பல்வேறு மக்களால் பரவியது.

உடனே இந்த போலி டாக்டர் தன்னிடம் ஏற்கனவே மருந்து உள்ளது அதாவது வராத வைரஸ் தொற்று நோய்க்கு முன்பே இவரிடம் மருந்து உள்ளது என பொய்யை பரப்புகிறார்.

இந்தியாவில் முதன்முதலில் வந்த வைரஸுக்கு இவர் எப்போது மருந்து கண்டுபிடித்தார்.? அந்த மருந்தை யாருக்கு கொடுத்தார்.? அதன் ஆய்வறிக்கை என்ன.? மருந்தின் Mechanism of action, Dose மற்றும் side effects பற்றி data க்களை அரசுக்கு அளித்தாரா.? என சில நியாமான கேள்விகள் எழுகிறது.

அந்த கேள்விகளுக்கு பதில் கூறாமல், தமிழகத்திலோ இந்தியாவில் எந்த கொரானா நோயாளிக்கும் மருத்துவம் பார்க்கவில்லையாம், மாறாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு போனிலே மருத்துவம் பார்த்தாராம் என மக்களை நம்ப வைக்க புதியபுதிய கதைகளை கூறிவந்தார்.

மேலும், சீனா அரசு இவரிடம் மருந்துக்கான ரகசியங்களை வாங்கி அதை அமெரிக்காவிற்கு பல மில்லியன் டாலருக்கு விற்றதாகவும், இந்தியாவும் சீனாவிடமிருந்து இவர் கொடுத்த மருந்துக்களை வாங்கியதாகும் தொடர்ச்சியாக பொய் கூறி வந்தார்.

என்னிடம் கொரானா நோயாளிகளை தாருங்கள், அல்லது எனக்கு கொரனா இரத்தம் ஏற்றுங்கள் நான் குணமாக்குகிறேன் என ஆக்ரோஷமாக பேசினால் மக்கள் இவரை நம்பிவிடுவார்கள் என நினைத்து வீடியோ வெளியிட்டார்.

கொசுவினால் COVID-19 வைரஸ் பரவும் என பொய்யான தகவலையும் கூறினார். இப்படி தொடர்ச்சியாக பல பொய்களை கூறி தன்னை விளம்பரபடுத்தி வந்தார்.

தேன், இஞ்சி, பூடு, கருவாபட்டை, கறி மசாலா, தண்ணீர் இவைகளை வைத்து கேரளாவிலும் ஒரு போலி வைத்தியர் கொரானாவிற்கு மருந்து என விற்பதை கேரளா போலிஸார் உடனடியாக கண்டு பிடித்து கைது செய்தனர்.

இதே போன்று தமிழகத்திலும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடித்தேன் என கூறும் போலி டாக்டர் திருத்தணிகாசலம் உடனடியாக தமிழக போலிஸார் கைது செய்யவேண்டும் என சமூக ஆவலர்களின் எதிர்ப்பார்பாக இருந்தது.

தனிகாசலம் கொரானாவிற்கான மருந்தின் மூலகூறுகளாக.. வல்லாரை, விழா நெல்லி, சமையலுக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலை, அஷ்வகந்தா, இன்னும் மூன்று மூலிகை தான் கொரானாவிற்கான மருந்து என ரங்கராஜ் பாண்டேவின் பேட்டியில் குறிப்பிடுகிறார்.

புதுவகை வைரஸான கோவிட்-19 ஐ தடுக்கும் மருந்துகள் பற்றி மருத்துவ விஞ்ஞானிகள் இன்னும் ஆய்வில் தான் உள்ளனர். உலக நாடுகள் பல இதனை கட்டுபாட்டிற்குள் கொண்டுவர நிஜ கவலையுடன் செயல்படும் இவ்வேளையில் இந்த போலி டாக்டர் சர்வசாதாரணமாக சமையல் செய்யும் இலை தழைகளை வைத்து மருந்து கண்டுபிடித்தாராம்.

போலி டாக்டர் தணிகாசலத்தின் கொரானா நோய்க்கான மருத்துவ குறிப்பான ஊமத்த இலை சாரில் மருந்துள்ளது என கூறியதை கேட்டு ஆந்திரா, சித்தூர் மாவட்டம் பழமனேரி என்ற ஊரை சேர்ந்தவர்கள் ஊமத்த இலை சாரு மருந்து தயாரித்து அதை குடித்து 11 நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி பணம், புகழிற்காக மனித உயிரில் விளையாடும் இவர் உண்மையில் மருத்துவர் தானா.? சித்த டாக்டர் பட்டம் பெற்றவரா என இவரை பற்றிய தேடலில், இவரின் பித்தலாட்டங்கள் தெரியவந்தது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், கருப்பஞ்சாவடி கிராமமத்தை சேர்ந்த திருத்தணிகாசலம் த/பெ, கலியபெருமாள் என்பவர் வம்சாவழியாக பாரம்பரிய முறையில் பச்சிலை வைத்தியம் செய்து வருகிறார் என 2016 ல் தாசில்தாரிடம் ஒரு சான்றிதழ் வாங்கியுள்ளார்.

இது மருத்துவருக்கான சான்றிதழ் இல்லை, இந்த சான்றிதழ் சித்த மருத்துவ கழகம் வழங்கியது அல்ல, இவர் பாரம்பரிய வைத்தியம் எனும் தொழில் செய்கிறார் எனும் சான்று தானே தவிர, வைத்தியம் செய்வதற்கான அனுமதி சான்று அல்ல, அதை தாசில்தார் கொடுக்கமுடியாது.

“இந்த திருத்தணிகாசலம் என்பவர் மருத்துவராகத் தொழிலாற்ற, தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றத்தில் எந்தவித மருத்துவச் சான்றிதழும் பெறவில்லை, மேலும் அவர் போலி மருத்துவராவார், அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது” என தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் வெளிப்படையாக கூறிவிட்டது.

இப்படி சித்த மருத்துவ மன்றம் கூறியதும், இவர் மீதுள்ள பொறாமையில் கூறியதாம், என திசை திருப்புகிறார். இவர் கூறுவது இவருக்கு நகைப்பாக தெரியவில்லையா.?

பொதுவாக அலோபதிக்கு போட்டியாக, கோவிட்19 ஐ எதிர் கொள்ளும் ஒரு சித்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டால் ஒட்டு மொத்த உலகமே சித்த வைத்தியத்தின் பக்கம் திரும்பும், அது சித்த வைத்தியத்தின் மிக பெரிய அங்கிகாரம் கிடைக்கும். இப்படி ஒரு சந்தர்ப்பத்தை சித்த மருத்துவ மன்றம் ஒருப்போதும் கைதவறவிடாது.

படித்த சித்த மருத்தவர்களின் குழுவாக இருக்கும் “சித்த மருத்துவ மன்றமே” இவரை போலி மருத்துவர் என கூறிவிட்டனர்.

இந்நிலையில் இவரிடம் அரசு ஐந்து கோவிட்-19 நோயாளிகளை கொடுத்ததாகவும் அதற்கு சிகிச்சை அளிப்பதாகவும் யூடியுப்பிலும், இவரது முகநூலிலும் பொய்யான செய்தியை பரவவிட்டார்.

கோவிட்-19 எனும் நோய்க்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாக தவறான செய்தியை பரவவிட்டு பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தணிகாசலம் மீது தொற்றுநோய் தடுப்பு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தடை உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தலைமறைவாகியிருந்து அவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவின் IP address மூலம் தணிகாசலம் தேனியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தணிகாசலத்தை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.

“தான் பிரபலமடைய மனித உயிரில் விளையாடும் திருத்தணிகாசலத்தை கைது செய்து நடவடிக்கை எடுத்த அரசு மனமார்ந்த நன்றி.

இந்த கைது நடவடிக்கை சற்று தாமதமாக இருந்தாலும், இது போன்று போலி மருத்துவர்கள் உருவாகாமல் இருக்க இந்த கைது நடிவடிக்கை ஒரு பாடமாக அமையட்டும்.

:- தக்கலை ஆட்டோ கபீர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com