கீழக்கரை நகர் இராமநாதபுர மாவட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த நகராக கருதப்படுகிறது. கீழக்கரை காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் மாயாகுளம், காஞ்சிரங்குடி உட்பட 15க்கும் மேற்பட்ட பகுதிகள் வருகிறது. ஆனால் இங்கு உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட 20க்கும் குறைவான காவலர்களே உள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு பல சமுக அமைப்புகளின் முயற்சிக்கு பின்னர் ஒரு சில காவலர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டது அன்றிலிருந்து இன்று வரை வேறு எந்த பணியிடங்களும் நிரப்பபடாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விசயமாகும். இதனிடையில் கீழக்கரை தாலுகாவாகவும் உயர்த்தப்பட்டு பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் போக்குவரத்து காவலர்களையும் பணியில் அமர்த்துவது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக தமிழக தலைமை காவல்துறை இயக்குனர், காவல்துறை தலைவர், காவல்துறை துணைத் தலைவர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களுக்கு கீழக்கரையில் காவல்துறையில் காவலர்கள் மற்றும் பணியாளர்களை சமீபத்திய மாற்றங்கள் மற்றும் கீழக்கரையின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு உயர்த்துமாறு வேண்டுகோள் மனு மூலமாக வைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.