களை கட்டும் வடக்குத் தெரு.. சட்டப்போராளிகளுக்கு கிடைத்த வெற்றி.. நகராட்சி நிர்வாத்தின் அதிரடி நடவடிக்கை..

நீங்கள் படத்தில் காணும் குப்பைக் கிடங்கு கீழக்கரை வடக்குத் தெருவில் பல வருடங்களாக நோய் பரப்பும் கிடங்காக இருந்து வந்தது. பல ஆட்சிகள் மாறினாலும் காட்சி மட்டும் மாறவே இல்லை. சமீபத்தில் கீழக்கரை மக்கள் களம் மூலமாக பல சமூக ஆர்வம் கொண்ட சகோதரர்களால் சட்டப் போராளிகள் என்ற வாட்ஸ் அப் குழுமம் ஆரம்பம் செய்யப்பட்டது. இக்குழுமத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் மக்களின் பொதுப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட அரசாங்கள் அதிகாரிகள் கவனத்திற்கும் மற்றும்; முதலமைச்சர் பிரிவுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வந்தது. சமீபத்தில் வடக்குத் தெருவில் கேட்பாரற்று கிடக்கும் குப்பைக் கிடங்குகள் பற்றிய கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் முதல்வர் பிரிவுக்கும் அனுப்பப்பட்டது. அதன் எதிரொலியாக இன்று முழு வீச்சில் நகராட்சி ஊழியர்கள் தனியார் கிடங்கில் கிடந்த கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றி வண்டிகள் மூலம் சுத்தம் செய்தனர். இச்சுகாதார பணிகள் நாளையும் தொடரும் என்று அறியப்படுகிறது. மக்கள் சக்தி ஒன்று கூடினால் அரசியல்வாதிகள் சாதிக்க முடியாததையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். இந்த நடவடிக்கைக்கு கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துக்கு கீழக்கரை மக்கள் களம் கீழக்கரை சட்டப் போராளிகள் மற்றும் கீழை செய்திகள் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்படுகிறது.