Home செய்திகள் காரப்பட்டு கிராமத்தில் பொங்கல் இலவச வேட்டி சேலைகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

காரப்பட்டு கிராமத்தில் பொங்கல் இலவச வேட்டி சேலைகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பட்டு கிராமத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு பொங்கல் வேட்டி , சேலைகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் மற்றும் புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி .சுந்தரபாண்டியன் வழங்கினார்பொங்கல் விழாவையொட்டி காரப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடைபெற்றது . கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் தலைமை வகித்து வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்ட கழக துணை செயலாரும் புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவருமான சி .சுந்தரபாண்டியன் , மற்றும் செங்கம் தனி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் நாராயணன், முன்னிலை வகித்தனர்.காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் என்கிற லட்சுமணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டு 360 பயனாளிகளுக்கு பொங்கல் வேட்டி , சேலை வழங்கி பேசியதாவது:பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் முதலமைச்சர் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பிப்ரவரி கடைசி உச்சத்தை தொடும் என்கின்றனர் மருத்துவர்கள். தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ளுங்கள் , ஓமைக்ரான் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றார்.இந்நிகழ்வில் திமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், முன்னால் கவுன்சிலர்கள் சுதகார் , K. பழனி புதுப்பாளையம் வருவாய் ஆய்வாளர் சரன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் அருண் பிரசாத், கிராம உதவியாளர் சம்பத் , ஊராட்சி செயலாளர் அருணகிரி மற்றும் வருவாய் துறை அரசு அதிகாரிகள் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட , ஒன்றிய , நகர , கிளை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் மூத்த முன்னோடிகள் பங்கேற்றனர் மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் , ஒன்றிய கவுன்சிலர் களும் ஊர் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!