Home செய்திகள் செம்பட்டி பஸ் நிலையம்3 முறை ஒத்தி வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

செம்பட்டி பஸ் நிலையம்3 முறை ஒத்தி வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பச்ச மலையான் கோட்டை ஊராட்சியில் உள்ள செம்பட்டி பஸ் நிலையம் என்பது திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரபலமானது. இந்த செம்பட்டி பஸ் நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பழனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், பெரியகுளம், தேனி, பொள்ளாச்சி சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கு முக்கிய பகுதியாக இருப்பதால் இந்த பஸ் நிலையம் வருடம் தோறும் ஏலம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் 3 முறை ஒத்தி வைக்கப்பட்டு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன் முன்னிலையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் திமுக மற்றும் பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். இவர்களுக்குள் சிண்டிகேட் என்று சொல்லக்கூடிய கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் விதமாக மிக குறைந்த அளவிலேயே ஏலத்தில் எடுத்தனர். இதை அறிந்த பத்திரிகையாளர் மற்றும் மூட கவிஞர்கள் சேகரித்துக் கொண்டிருந்த போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மற்றும் போலீசார் ஏலத்தில் நடக்கும் நிகழ்ச்சியை செய்தி எடுக்கக் கூடாது என்று கூறி வெளியே போகச் சொல்லி அவமரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் உடனடியாக ஜனநாயக கடமையாற்ற தடுத்தால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று போர்க்கொடி தூக்கி ஏலம் நடக்கும் இடத்தில் ஓரமாக நின்று போராட்டம் செய்தனர். அரசியல் கட்சியினர் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையிலேயே பேரம் பேசி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் விதமாக ஏலத்தை நடத்தி முடித்தனர். இதனால் பல லட்ச ரூபாய் ஊராட்சிக்கு வரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இப்பகுதி பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!