Home செய்திகள் சோழபுரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பொது கழிப்பறை கட்டிடத்தை இடிந்தால் பொதுமக்கள் சாலை மறியல்.

சோழபுரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் பொது கழிப்பறை கட்டிடத்தை இடிந்தால் பொதுமக்கள் சாலை மறியல்.

by mohan

 விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் பகுதியில் 30 ஆண்டுகளாக அனுபவ பாத்தியத்தில் அனுபவித்து வந்த பெண் இறந்துவிட்டார்அடுத்து அவருடைய வளர்ப்பு பேரன் அந்த இடத்தை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சோழபுரம் 21வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி என்பவர் அந்த இடத்துக்கு நடுவே பொதுக்கழிப்பிடம் கட்டுவதாக கூறி கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அனுபப பாத்தியத்தில் இருந்த நபரின் பேரன் கட்டிடத்தை இடித்துள்ளார் இதனால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .தகவல் அறிந்து வந்த இராஜபாளையம் வட்டாச்சியர் இராமச்சந்திரன் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சபரிநாதன் மற்றும் தளவாயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தெய்வீக பாண்டியன் ,ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கழிப்பிடம் கட்டியது தவறு உங்களுக்கு கழிப்பிடம் கட்ட வேண்டும் என நினைத்தால் அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்து அவர்களுக்கு சுகாதார வளாகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கித் தருவதாக வாக்குறுதி அளித்த பின்பு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது இதனால் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!