நேரு நினைவு கல்லூரி புத்தனாம்பட்டியில் இரண்டு நாள் கைபேசி பழுது நீக்கல் பயிற்சி.

அறிவியலில் இன்றைய கண்டு பிடிப்புகளிலே, வியக்கத்தக்க அதிசயக் கருவிகளுள் ஒன்று நாம் கையாளும் கைபேசி ஆகும். இன்றைய இளைஞர்களின் சட்டைப் பாக்கட்டில் பணம் இருக்கிறதோ, இல்லையோ கைபேசி மட்டும் இல்லாமல் இருக்காது. அதேபோல் பெண்கள் கைப்பையில் மேக்கப் சாதனங்கள் இளம் இருக்கிறதோ இல்லையோ கைபேசி இல்லாமல் இருக்காது. தற்போது கைபேசியானது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருந்து கொண்டு ஆட்சி புரிந்து வருகிறது. கைபேசியைப் பொறுத்தவரை வாழ்விலிருந்து பிரிக்க முடியாது. ஒரு அத்தியாவசியப் பொருளாகி விட்டது நமதுஅனைவராலும் கையாளப்படும் கைபேசியை மக்கள் சரியான முறையில் |பயன்படுத்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.”கற்றது கை மண்ணளவு… கல்லாதது உலகளவு”நேரு நினைவு கல்லூரி புத்தனாம்பட்டியில் டிசம்பர் 14, 15 இரண்டு நாள் கைபேசி பழுது நீக்கல் பயிற்சி நடைபெறுகிறது. கைபேசியில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்ய நியூ டெக்னாலஜி, கோயம்புத்தூர் இருந்து பயற்சி அளிக்காக வருகிறார்கள்.இந்த பயிற்சியின் நோக்கம் படிக்கிற போது மாணவ மாணவிகள் பணம் சம்பாரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல். மேலும் மாணவ மாணவிகள் திறமையை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் தொழில் முயற்சிக்கு சான்று அளித்தல். ஒரு காலகட்டத்தில் இது போன்ற பயற்சியின் மூலம் சுய தொழில் செய்து அவர்கள் பெரிய அளவிலான நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக நேரு நினைவு கல்லூரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பயிற்சி கட்டணம் :500 ரூபாய்.