வேலூர் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக அசோக்குமார் நியமனம்.

தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம், இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள 4 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.அதன்படி வேலூர் மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்த இணை இயக்குநர் அசோக் குமார் வேலூர் மாநகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். இங்கு ஆணையராக இருந்த சங்கரன் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.