Home செய்திகள் பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை.

பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை.

by mohan

 மதுரையில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை |சார்பாக ராம ரத யாத்திரை தொடங்கி வைக்க வருகை தந்த மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர்வி.கே. சிங்பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் .இன்று ஒரு முக்கியமான நாள் ராம ரத யாத்திரையை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். நாடு முழுவதும் ராமர் ரத யாத்திரைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரத யாத்திரை செல்லும் இடங்களில் சிறுவர்கள், பொதுமக்கள், தொழில் நடத்துபவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியை மனமுவந்து அளிக்கின்றனர்.மேலும், ராமர் ஆலயம் கட்டப்படுவதை நாடு முழுவதும் உள்ள மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.ராமர் ஆலயம் கட்டபடுவதோடு ராம ராஜ்ஜியம் உருவாக்கப்படும்.தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்துவருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கப்படும்.தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சியடைந்துள்ளது.பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது சுழற்சிமுறையில் ஆனது.சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப விலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.கடந்த 2011 – 2014 ஆகிய ஆண்டுகளில் கேஸ் விலை ஆயிரத்து 240 ஆக இருந்தது. தற்போது 750 என்ற அளவில்தான் உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் டீசல் விற்பனையில் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படலாம் என்ற ஆலோசனையும் உள்ளது.மேலும், இதுதொடர்பாக மாநிலங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!