Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரை விமான நிலையத்தில் ராகுல்காந்தி பேட்டி.. பொங்கல் விழா மற்றும் ஜல்லிகட்டில் பங்கேற்பு..

மதுரை விமான நிலையத்தில் ராகுல்காந்தி பேட்டி.. பொங்கல் விழா மற்றும் ஜல்லிகட்டில் பங்கேற்பு..

by ஆசிரியர்

தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டை காண்பதற்காக முதன்முறையாக தமிழகத்திற்கு வந்துள்ளேன். தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழக மக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும், குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விளையாட்டில் கலந்து கொண்ட காளைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளைகள் விளையாடுவதைப் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருந்தது. தமிழக மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன். அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் கலாச்சாரத்தை ஈடுபடு, பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்களை நான் பாராட்டுகிறேன். என்று தமிழக மக்களுடன் இருப்பதை கடமையாக கருதுகிறேன். தமிழக கலாசாரத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.

மனிதர்களால் காளைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லை. இளைஞர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டது அது தவறில்லை. இந்த கலாச்சாரம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ் கலாச்சாரத்தை அளிப்பதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ் மொழிக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம். தமிழர்களின் உணர்வுகளை எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அளிக்க முடியாது. தமிழகத்தின் கலாச்சாரத்தையும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பற்றி என்னிடம் எடுத்துக் கூறினார்கள் இதன் மூலம் நான் அதிகமாக அறிந்து கொண்டேன். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டம் விவசாயிகளை பாதுகாப்பதற்கு அல்ல அவர்களை அழிப்பதற்காகவே. விவசாயிகளையும் விவசாய பொருள்களையும் அழிப்பதற்கு காரணம் பிரதமருடைய 3 நண்பர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றுவதற்காகவே. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு அவர்களை அழிப்பதற்கு மத்திய அரசு குறி வைத்துள்ளது. விவசாயிகளை பலவீனப்படுத்த நினைத்துவிட்டால் இந்தியாதான் பலவீனப்படும். மத்திய அரசு நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு உதவியாக இல்லை. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவிய போது பிரதமர் ஏன் மௌனமாக இருந்தார், ஏன் அவர் குரல் கொடுக்கவில்லை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!