மதுரையில் வாகன விபத்தில் 2 பேர் பலி .

மதுரையில் வாகன விபத்தில் 2 பேர் பலி வெவ்வேறு சம்பவங்களில்.
வாகன விபத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலியானார்கள். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுபிரிவுபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் முகம்மது அப்பாஸ்50, அதே பகுதியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா 26என்பவர் பைக்கை ஓட்டிச் செல்ல முகம்மது அப்பாஸ் பின் புறமாக அமர்ந்து பயணம் செய்தார் .பைக் கரிசல்குளம் ரயில்வே கேட் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற பாதசாரரிஒருவர்மீது நிலைதடுமாறி மோதியது .இதனால் தவறி விழுந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் முகமது அப்பாஸ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் .இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு விபத்து கோமதிபுரம் செம்பருத்தி தெருவை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் 59 .இவர்மாட்டுத்தாவணி அருகேமேலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அடுத்தடுத்து வந்த காரும் லாரியும் இவர் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே முத்துக்கருப்பன் பலிலியானார். இந்த விபத்து குறித்தும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image