
மதுரைகூடல்புதூரில் வீட்டை உடைத்து 19 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை கோசாகுளம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் முரளிதரன் 39. இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டாராம்.திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டை உடைத்து 19 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து கூடல்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்