
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே என் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு 75வது பிறந்த நாள் விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்கே விஜய் நல்லதம்பி, ராஜபாளையம் கிளை கழக செயலாளர் மாரியப்பன் மற்றும் மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பேசிய விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கட்டபொம்மன் பெயரைக் கேட்டாலே வீரம் தானாக வரும் விடுதலைப் போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்டவர் என சித்திரகுப்தன் எழுதிய கவிதையை பொதுமக்கள் முன்னிலையில உரையாற்றினார் நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் துவக்கி வைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம்