இராமநாதபுரத்தில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா. நவாஸ் கனி ஏற்பாட்டில் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம். எஸ்.ஏ.ஷாஜகான் வரவேற்றார்.

இராமநாதபுரம் மாவட்ட திமுக., பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் (திமுக) பவானி ராஜேந்திரன், மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் வியாக்கத் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி தொகை காசோலையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் ராமநாதபுரம்  நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி முன்னிலையில் வழங்கினர். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி,  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகமது, ராமநாதபுரம் மாவட்ட திமுக., முன்னாள் செயலாளர் சுப.த.திவாகர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாத துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image