Home செய்திகள் கொரோனா பாதிப்பால் இறந்த முன் களப்பணியாளர் குடும்பத்துக்குரூ.5 லட்சம் நிவாரணம்

கொரோனா பாதிப்பால் இறந்த முன் களப்பணியாளர் குடும்பத்துக்குரூ.5 லட்சம் நிவாரணம்

by mohan

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பெற்றுக் கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளராக பணியாற்றி வைரஸ் தொற்றால் மரணமடைந்த பாக்குவெட்டி விஏஓ., கர்ணன் குடும்பத்திற்கு வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை, கர்ணன் மனைவி கலையரசியிடம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். விதவை இருவர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உதவித்தொகை, ஒருவருக்கு பட்டா உத்தரவு ஆணை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறு தொழில் மற்றும் பெட்டிக்கடை அமைக்க உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ.58,332 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறப்பாக பணியாற்றி தமிழக முதல்வரால் 2020-ஆம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது பெற்ற எமனேஸ்வரம் கிளை நூலகர் உ.நாகேந்திரன், சிறந்த நூலக ஆர்வலர் விருது பெற்ற பாம்பன் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் எம்.முத்துவாப்பா ஆகியோர் ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவசங்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜி.கோபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.ஜோதிலிங்கம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!