
மதுரை திலகர்திடல் காவல்நிலைய ஆய்வாளர் .கவிதா ரோந்து பணியில் இருந்தபோது திருநங்கை கவியிடம் பேசினார்.
மருத்துவம் படித்தும் திருநங்கை என்பதால் பணிசெய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு தனது செலவில் மருத்துவ சட்டை மற்றும் உபகரணம் வாங்கி கொடுத்து விரைவில் மருத்துவ பணியில் ஈடுபட வழிவகை செய்துள்ளார்.
காவல் ஆய்வாளரின் இந்த மனிதநேய செயலை ஊக்கப்படுத்தி வாழ்த்தும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளையின் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இதனை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு காவல் ஆய்வாளர் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் இள.அமுதன், துரைவிஜயபாண்டியன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் உடன் இருந்து வாழ்த்தினர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்