Home செய்திகள் விவசாய பாசனத்துக்கு குப்பனத்தம் அணை நீரை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

விவசாய பாசனத்துக்கு குப்பனத்தம் அணை நீரை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் குப்பனத்தம் அணை அமைந்துள்ளது.அணையிலிருந்து சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கவேண்டும் என செங்கம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.அதன் அடிப்படையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து தண்ணீா் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.பின்னா், இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பிவைத்தனா்.இதன் பேரில், முதல்வா் எடப்பாடி பழனிசாமி விவசாய பாசனத்துக்கு குப்பனத்தம் அணையிலிருந்து தண்ணீா் திறக்க அனுமதி வழங்கினாா்.அதன்படி, குப்பனத்தம் அணையில் உள்ள நீரை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் திறந்துவிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்த அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு வருகிற 29-ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.இதன் மூலம் செங்கம் பகுதியில் உள்ள செங்கம், கரியமங்கலம், காயம்பட்டு, தோக்கவாடி, நாச்சிப்பட்டு, முன்னூா்மங்கலம், கொட்டகுளம் உள்ளிட்ட 28 ஏரிகள் நிரம்பும் என்றாா்.தொடா்ந்து, துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் குப்பனத்தம் அணை கட்ட நிலம் அளித்த 105 குடும்பங்களுக்கு இலவச மனைப் பட்டாக்களை அமைச்சா் வழங்கினாா்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, ஆவின் மாவட்டத் தலைவா் அக்ரி. கிருஷ்ணமூா்த்தி, மு.பெ.கிரி எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் ரத்தினசாமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் மகேந்திரன், மாவட்ட உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியன், செங்கம் உதவி செயற்பொறியாளா் ராஜாராமன், கூட்டுறவு ஒன்றியங்களின் மாநில முன்னாள் தலைவா் அமுதா அருணாசலம், கல்லாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சிவானந்தம், முன்னாள் தலைவா் அசோக், ஏரிப் பாசன சங்கத் தலைவா் சங்கா்மாதவன், செங்கம் வட்டாட்சியா் மனோகரன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!