தென்காசியில் பத்திரிகையாளர் சங்க கூட்டம்;மாநில தலைவர் சுபாஷ் பங்கேற்பு..

தென்காசியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம், தென்காசி பத்திரிகையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் தென்காசி பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு பத்திரிகையாளர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.சண்முகம் தலைமை வகித்தார். தென்காசி மாவட்ட சங்க தலைவர் சு.ராசேந்திரன், தென்காசி பத்திரிகையாளர் சங்க தலைவர் வி.கணபதி பாலசுப்பிரமணியன், பொருளாளர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் எம்.முத்துசாமி வரவேற்று பேசினார்.இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்க செயலாளருமான டி.எஸ்.ஆர்.சுபாஷ் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு செய்ய வேண்டிய சலுகைகள், கொரோனா காலத்தில் பத்திரிகையாளர்களுக்கு அரசு உதவி உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில மாநாட்டை தென்காசியில் வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தவும், இம்மாநாட்டில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் கு.வெங்கட்ராமன், மாநில துணைத் தலைவர் ஜெ.நிக்சன், டெல்டா மண்டலச் செயலாளர் தஞ்சை எ.எழில் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.கூட்டத்தில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் எம்.முத்துசாமி நன்றி கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered