Home செய்திகள் மோடி அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் அறிவிப்பு

மோடி அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம் அறிவிப்பு

by mohan

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (செப்.21) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன் சீமான் சிக்கந்தர், மாவட்ட செயலாளர் சிக்கந்தர், பொருளாளர் வழ யூசுப் _ஆகியோர் கலந்து கொண்டனர்.பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியதாவது;மோடி அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டம்:விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நிறைவேறியுள்ளது.

இந்த சட்ட வரைவுகளில் உள்ள குறைகளை தேர்வு குழுவுக்கோ அல்லது நிலைக் குழுவுக்கோ அனுப்பி ஆராயாமல், எந்தவித திருத்தங்களும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ளது.இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எந்தவிதப் பலனையும் அளிக்காது; மாறாக அது பெருமுதலாளிகளுக்கே மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க வழிவகுக்கும். அதனால் தான் வட மாநிலங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் இன்றைக்கு வீதிகளில் வந்து போராடி வருகிறார்கள். மத்திய உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுரும் விவசாயிகளுக்கு விரோதமான இந்த சட்டத்தைக் கண்டித்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய அரசின் இந்த சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. விவசாயிகளுக்கு அதுதான் மிகவும் முக்கியமான ஒன்று என்பதால், இந்த சட்ட வரைவுகள் விவசாயிகளைப் பாதிக்காது என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டை நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை.புதிய சட்டங்களால் இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்யும்  இப்போதைய வெளிப்படையான கொள்முதல் நடைமுறையை மத்திய அரசு நிறுத்திவிட்டு அதனை கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றிவிடும். அதனால் அவர்களின் கருணைக்காக விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை நீக்கப்படும். இதனால் பெருநிறுவனங்களின் பதுக்கல், கள்ளச்சந்தை உள்ளிட்டவற்றை தடுக்க முடியாத நிலை ஏற்படும்.இந்த சட்டங்கள் மாநில அரசின் சந்தைப்படுத்தல் உரிமை, கொள்முதல் உரிமை, பதுக்கலை தடுக்கும் உரிமை போன்றவற்றை தட்டிப் பறிக்கின்றன. அதுமட்டுமின்றி மாநிலங்களின் வரி வருவாயை மத்திய அரசு பறித்துச் செல்லும் நிலை உருவாகும். இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.

தமிழக முதல்வர் இந்த மூன்று விவசாய விரோத சட்டங்களையும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்கள் என கூறுவது தவறானது. விவசாயிகளுடைய குரலை கேட்காமலேயே இந்த சட்டங்கள் நிறைவேற அதிமுகவுக்கு ஆதரவளித்தது கண்டிக்கத்தக்கது.ஆகவே, விவசாய விரோத 3 சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு எதிராகவும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை போராட்டமும், மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெறவிருக்கின்றன.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்:

மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு எனும் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதல், நாடு முழுவதும் ஏழை எளிய கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனியாக மாறிப்போயுள்ளது. மருத்துவக் கல்வியை வசதிபடைத்த மேல்தட்டு வர்க்கம் மட்டுமே கற்றுக்கொள்ளவும், அதனை கார்ப்பரேட் மயமாக்கும் யுக்தியாகவே நீட் கொண்டுவரப்பட்டுள்ளது.  நீட்டின் மூலம் தரம் என்ற பெயரில், உயர் கட்டணங்கள் வழியாக தனிப் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி, வசதிபடைத்த ஒரு சாரார் மருத்துவ கல்லூரிகளில் நுழைகின்றனர். அதேவேளையில் வசதியற்ற ஏழை மாணவர்கள் மருத்துவம் பயில தகுதி அற்றவர்கள் என துரத்தியடிக்கப்படுகின்றனர். இதிலும் மத்திய அரசின் கார்ப்பரேட் நலனே உள்ளதே தவிர, சிறிதும் ஏழை-எளிய மாணவர்களின் நலன் என்பது அறவே இல்லை.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது முதல் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு கல்வியில் பின்தங்கிய உ.பி., பீகார் மாநிலங்களை விட குறைவான தமிழக மாணவர்களே நீட் தேர்வை எழுதியுள்ளனர். நீட் தேர்வு அறிமுகமானது முதல் இதுவரை 13 தமிழக மாணவர்கள் மன உளைச்சலால் தங்களது உயிரை மாய்த்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 5 மாணவர்கள் உயிர் நீட் தேர்வுக்கு பலிகடா ஆக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனையான விசயமாகும். இந்த மரணங்களுக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தின் சமூக நீதியை காக்கவும், ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவை நிறைவேற்றவும் நீட் தேர்வுக்கு எதிரான அடுத்தடுத்த நடவடிக்கைகளை சோர்ந்துவிடாமல் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசிடம் உறுதியான திட்டமிடல் இல்லை:மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இதுவரை 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. அதேபோல் மருத்துவமனைக்கான அடிக்கல் பிரதமர் மோடியால் நாட்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனால் இதுவரையிலும் அதற்கான பணிகள் என்பது இதுவரை நடைபெறவில்லை. மருத்துவமனைக்கான இடம் இன்னும் சுகாதாரத்துறைக்கு வழங்கப்படவில்லை என்பதோடு, மருத்துவமனை கட்ட மத்திய அரசிடம் போதிய நிதி இல்லாமல் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் அது வந்த பின்னரே மருத்துவமனை கட்டும் பணி துவங்கும் என மத்திய அமைச்சர் அஷ்வின் குமார் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மத்திய அரசுக்கு முழுமையான அக்கறையோ, உறுதியான திட்டமிடலோ இல்லை என்பது தெளிவாகிறது. சிலைகள் அமைப்பது, விளம்பரம் செய்வது என பல ஆயிரம் கோடிகளை வீண் செலவிடும் மத்திய அரசு, மக்கள் பயன்பாட்டுக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட வெளிநாட்டு நிறுவனத்தை எதிர்பார்த்து காத்திருப்பது ஏற்புடையதல்ல. உடனடியாக மத்திய அரசே அதற்கான நிதியை ஒதுக்கி மருத்துவமனை கட்டுமானப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

– செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!