Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கழிவுபொருட்களிலிருந்து எரிபொருள் விரைவில் அறிமுகம் இயற்கை விஞ்ஞாணி ராமர் பிள்ளை தகவல்..

கழிவுபொருட்களிலிருந்து எரிபொருள் விரைவில் அறிமுகம் இயற்கை விஞ்ஞாணி ராமர் பிள்ளை தகவல்..

by ஆசிரியர்

விரைவில் கழிவுபொருட்களிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருட்கள் கிரீன் அங்காடிகள் மூலம் சந்தைப்படுத்தப்படும்.  தமிழகம், கேரளாவில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என, மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், ராமர்பிள்ளை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பொதும்பு கிராமத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில், டெக்ரீன் டிரான்ஸ்போர்ட் கார்பரேசன், எல்.எல்.பி. நிறுவனமும் இணைந்து எனது தலைமையில் பயோ எரிபொருள் தயாரித்து, முதற்கட்டமாக டிஜிடிசி பங்குதாரர்களுக்கு மட்டுமே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கழிவுநீர், விவசாயக் கழிவுகள், அழுகிய மாவுசத்து கொண்ட உணவுப் பொருள், விலங்குகளின் கொழுப்பு, நகராட்சிகள் கழிவுகள் மூலம் உயிரி எரிபொருட்களாக மாற்றி ஆற்றல் மூலம் உயிரி எரிபொருட்களை கொண்டு, பேரூந்துகளின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும், விவசாயிகளின் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்.

இதேபோல, கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில், 1600 ஏக்கர் பரப்பளவில் பயோ பெட்ரோல், பயோ டீசல், பயோ எரிவாயு தயாரிக்கும் பணியானது மத்திய அரசு, கேரளா, தமிழக அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், இந்திய அளவில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், ஆயிரம் இளம் விஞ்ஞானிகளுக்கும், இத் திட்டத்தில் வாய்ப்பு கிட்டும். பயோடீசல், பயோ பெட்ரோல், பயோ கேஸ் ஆகியவை கிரீன் அங்காடி மூலம் கேரளாவிலிலும், தமிழகத்திலும் செப். 10..ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்றார்.

பேட்டியின்போது, சிஜிஐபிடிஎல் நிறுவண இணை இயக்குநர் எஸ். சற்குணராஜ்துரை, டிஜிஒ. நிறுவன பங்குதாரர் ஜெ. அனிதாஜோயல் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!