நெல்லையில் சினிமா பிரபலம் ரோபோ சங்கரின் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சினிமா பிரபலம் ரோபோ சங்கர் மூலம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா சதீஷ் பிரபாகர் அவர்கள் உத்தரவுப்படி , மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தலின்படி , சினிமா பிரபலம் ரோபோ சங்கர் மற்றும் சரவணன் ஆகியோர் பாளை ஏ. ஆர் லைன் ஆயுத படை காவலர் குடியிருப்பு பகுதியில் கொரனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தபட்டவர்களை சந்தித்தனர்.சினிமா பிரபலங்களான ரோபோ சங்கர் மற்றும் சரவணன் கொரனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களை சந்தித்து உரையாடினர்,

குழந்தைகளை மகிழ்விக்க பல்வேறு குரல்களில் பேசி காமெடி நிகழ்ச்சிகளை நடத்தினர். கொரனா நோயால் தனிமைப்படுத்தபட்டுள்ள அவர்களை மகிழ்விப்பது அவர்களுக்கு மன அமைதியை தருவதோடு தனக்கும் மன நிம்மதியைத் தருவதாக தெரிவித்தனர்.பின் அனைவரும் சமூக இடைவெளி விட்டு இருக்கவும், முக கவசம் அணிவது அவசியம் பற்றியும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் போஸ் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சங்கரலிங்கம் ,மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் நடராஜன் ,தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் கனகப்பிரியா, செவிலியர்கள் கலாவதி மற்றும் ராணி பங்கேற்றனர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image