தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளி எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில அளவில் சாதனை; கல்வியாளர்கள் பாராட்டு..

தென்காசி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளது.தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 109 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.இப்பள்ளி மாணவர்கள் ஆர்.அஜய்குமார், எஸ்.கிஷோர்குமார் ஆகிய இருவரும் 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடம் பெற்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்தனர்.

இவர்களில் ஆர்.அஜய்குமார் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100.

எஸ்.கிஷோர்குமார் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-99.

மாணவி; ஜெ.ஜெரிஷா சரோன் ரோஸ் 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-99, அறிவியல்-100, சமூகஅறிவியல்-99.

மாணவர் எம்.கௌதம் அரவிந்த் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடம் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-99.

இப்பள்ளியைச் சேர்ந்த 4 பேர் கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும், 2 பேர் அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்களும், ஒருவர் சமூக அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றனர். மேலும் 20 பேர் தமிழில் 100க்கு 99 மதிப்பெண்களும்,3 பேர் ஆங்கிலத்தில் 100க்கு 99 மதிப்பெண்களும் பெற்றனர். 495 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேர்களும், 490 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 27 பேர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 66 பேர்களும் பெற்றுள்ளனர். பள்ளியில் சராசரி மதிப்பெண் 437 ஆகும்.

சாதனை படைத்த மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை க.சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டினர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image