இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் சார்பாக பெருவயல் ஊராட்சி கலையனூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.கலையனூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை இராமநாதபுரம் ஒன்றிய தாய்மண் திட்ட பொறுப்பளர் குருநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.மக்கள் பாதை கிராம பொறுப்பாளர்கள் சிவராஜ், சூர்யா முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் பார்கவி,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் பாலமுத்து திண்ணைதிட்ட பொறுப்பாளர் பிரீத்தி திடல்திட்ட பொறுப்பாளர் முகேஷ் திடல் மற்றும் திண்ணை பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.