செங்கோட்டையில் மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையை கண்டித்து கருப்புச் சட்டை ஆர்ப்பாட்டம்…

செங்கோட்டையில் இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தென்காசி மாவட்டம் செங்கோட்டை இரயில் நிலையம் முன்பு சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் ஏஐஆர்எப் செங்கோட்டை கிளையின் சார்பில் இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் இரயில்வே துறையை தனியார்மய கொள்கையிலிருந்து வெளிறேவும்,முடக்கப்பட்ட ஜனவரி டிஏ 4சதவீதத்துடன் ஜீலை 3சதவீத டிஏயையும் சேர்த்து அரியரோடு வழங்கிடவும், 2019-2020 பிஎல்பி போனசை முடக்ககூடாது, இரயில்வே தொழிலாளர்களுக்கு சம்பளம் ஓய்வூதியம் தர பணமில்லை என காரணம் காட்டி கேரள அரசு ஒரு மாத சம்பளம் பிடித்தம் செய்தது போல் எங்களின் 3சதவீத சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது, பயணிகள், சரக்கு இரயில்களை தனியாருக்கு விற்ககூடாது, பணிமனைகளை கார்ப்பரேட்டுக்கு விற்க துடிக்காதே 2500 டீசல் லோகோகளை கண்டம் செய்து விற்கும் உத்தரவால் இந்திய இரயில்வேயில் உள்ள 42 டீசல் ஷாப்களில் வேலை செய்யும் சுமார் 14000 எஸ்ஆரில் சுமார் 4000 தொழிலாளர்களின் வேலைக்கு உலை வைக்ககூடாது. நிரப்பப்படாத புதிய சேப்டி பதவிகளையும் 50சதவீத நான் ஷேப்டி பதவிகளையும் சரண்டர் செய்யும் உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் சாபு தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். எல்ஆர்எஸ் தலைவர் சுரேந்திரன் முன்னாள் செயலாளர் கல்யாணிப்பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் உதவி தலைவர்கள் சந்திரக்குமார், குமரேசன் மற்றும் கிளை செயற்குழு உறுப்பினர்கள் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையை எதிர்த்து அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது. முடிவில் உதவி தலைவர் அகிலன்(எ)நேரு நன்றி கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image