மதுரை மூதாட்டியிடம் சைக்கிளில் வந்த வாலிபர் தங்க செயினை பறிக்கும் CCTV காட்சி வெளியீடு

கொரானா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு போடப்பட்டிருந்தது.இந்நிலையில் மதுரை கிழக்கு வெளிவீதியில் மைனா தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ஆத்மாராம் மனைவி உமா என்னும் மூதாட்டி நடந்து சென்றபோது அதனை பின்தொடர்ந்து சைக்கிளில் வந்து சென்ற வாலிபர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.மூதாட்டியை தங்கச் செயினை விடாமல் இழுத்து பிடித்தால் மூதாட்டியை கீழே தள்ளி அடித்து செயினை பறித்துச் சென்றார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த செயின் பறிப்பு சம்பந்தமாக மதுரை தெற்குவாசல் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர் அதோடு அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் கீழ வெளி வீதி யில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகின அதில் நெஞ்சை பதற வைக்கும் அளவுக்கு மூதாட்டியை கீழே தள்ளி அடித்து செயினை பறிப்பது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.நேற்று தளர்வு மற்ற முழு ஊரடங்கு என்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்த அளவே இருந்தது இதனால் வழிப்பறி திருடனுக்கு செயினை பறித்துச் செல்ல ஏதுவாக அமைந்திருந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..