முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ” PYTHON BASICS FOR DATA ANALYSIS ” சர்வதேச இணையவழி கருத்தரங்கு நிகழ்வு..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி பேராசிரியர்களுக்கான ஓர் நாள் சர்வதேச இணையவழிக் கருத்தரங்கம் “PYTHON BASICS FOR DATA ANALYSIS” என்ற தலைப்பில் இன்று (13/07/2020) காலை  11.30 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் Dr. A. R. நாதிராபானு கமால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்களை வழங்கி கருத்தரங்கிணை தொடங்கி வைத்தார். அவரைத்தொடர்ந்து கணினி அறிவியல் துறைத் துறைத்தலைவர் S.ரீனா பர்வின் அனைவரையும் வரவேற்கும் விதமாக வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்புப் பேச்சாளர் Dr. Haleema ,Training and Development Director IT Expert Training & Adjunct Faculty University of Stirling ,RAK Campus, UAE. கணினித்துறையில் PYTHON என்ற செயழியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, அவ்வாறு பதிவிறக்கம் செய்த செயழியை தொடக்கம் முதல் இறுதி வரை, பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி ஆய்வாளர்கள் வரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறியதுடன், பங்கேற்பாளர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடையளித்தும் சிறப்புரையாற்றினார். சிறப்பாக நடைபெற்றக் கருத்தரங்கிள் 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா மட்டுமல்லாது உலகளவில் (சவுதி, துபாய் ) போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் பள்ளிக் கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள்,பள்ளி ஆசிரியர்கள், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாகக் கருத்தரங்கப் பங்கேரற்பாளர்களுக்கு நன்றியுரை வழங்கியதுடன் நிறைவு பெற்ற இக்கருத்தரங்கிணைக் கணினி அறிவியல் துறை, கணினிப் பயன்பாட்டியல் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image