இராமநாதபுரம் மாவட்ட மக்கள்பாதை இயக்கம் சார்பாக நலம் திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பு மருந்து ஆர்சனிக்கம்  ஆல்பம் -30  வழங்கும் நிகழ்வு

இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் வல்லம் ஊராட்சி மக்கள் பாதை சார்பாக கரைமேல் குடியிருப்பு கிராமத்தில் இன்று நலம் திட்டத்தின் கீழ்  கொரோனா தடுப்பு மருந்து ஆர்சனிக்கம்  ஆல்பம் -30  வழங்கப்பட்டது.வல்லம் ஊராட்சி நிதியிலிருந்து ஊராட்சிமன்றத் தலைவர் ரெத்தினம் துரைராஜ் அவர்கள் கிராம மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க உதவினார்.நிகழ்வில் மக்கள் பாதை மேலியனேந்தல் கிராம பொறுப்பாளர் அஜித், தன்னார்வலர்கள் கரன், தனபால் ஆகியோரும் கலந்துகொண்டு மக்களுக்கு மருந்து வழங்கினர்.

மேலும் நயினார்கோவில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜோதிமணி அவர்களால் வழங்கப்பட்டது.மேலும் அ.காச்சான் கிராமத்திற்கு மக்கள் பாதை தன்னார்வலர்களால் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.தனி மனித இடைவெளியை பின்பற்றி  மருந்து வழங்கப்பட்டது.இந்த நிகழ்விற்கு மக்கள் பாதை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் இராவணன் குமார், மக்கள் பாதை அயலக பொறுப்பாளர் அன்பு, ரமேஷ் ஆகியோர் மருந்து வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image