சர்வதேச அளவில் “ஸ்டார்ஸ் ஆப் கோவிட் விருது பெற்ற 100 சாதனையாளர்களில் அன்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் இடம்பெற்றுள்ளார்.

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் World Humanitarian Drive (வேர்ல்ட் ஹுமானிட்டேரியென் டிரைவ் WHD) என்ற சர்வதேச அமைப்பு சார்பில், கொரோனா காலத்தில் சேவையாற்றிய 100 பேருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
உலகளவில் தேர்வு செய்யப்பட்ட 100 நபர்களில் தமிழகத்தில் இருந்து எம்.ஆட்டோ நிறுவனர் மன்சூர் அலிகான், ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜய் கார்த்திகேயன், பாலகிருஷ்ணா ஐ.பி.எஸ்., இளம் மருத்துவர் ஹக்கீம், அன்பு அறக்கட்டளை நிறுவன தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் உள்ளிட்ட பலருக்கும் விருது கிடைத்திருக்கிறது.

காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொசோவா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபத்மீர் சையிது, நேபாள் முன்னாள் பிரதமர் ஹெச்.இ. மாதவ்குமார், ஸ்பெயின் -அண்ட்லூசியா தேசிய மாகாண சபை தலைவர்கள் கலந்துகொண்டு, இந்த இக்கட்டான கொரோனா தொற்று பரவிய சூழலில் மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றிய 34-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1600 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அதில் 100 நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கவுரவித்துள்ளது World Humanitarian Drive அமைப்பு. இதில் “வேர்ல்ட் ஹுமானிட்டேரியென் டிரைவ்” அமைப்பின் தலைவர் அப்துல் பாசித் சையத் எழுதிய ‘STARS OF COVID’ மற்றும் ‘RE ENGINEERING HAPPINESS’ ஆகிய இரு நூல்களை வெளியிட்டனர்.

மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், நிர்வாக சேவைகள், கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், மருத்துவத்துறை, அறக்கட்டளை, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர், சுற்றுச்சூழல் இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பன்னிரண்டு தலைப்புகளின் கீழ் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த அன்பு அறக்கட்டளையின் நிறுவனத்தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரா.யோகுதாஸ்,
மயிலாடுதுறை  செய்தியாளர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply