இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகம்: குப்பைபோல் குவித்து வைக்கபட்டுள்ள கிருமிநாசினி பொருட்கள்!

இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகம்: குப்பைபோல் குவித்து வைக்கபட்டுள்ள கிருமிநாசினி பொருட்கள்!

திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி பேரூராட்சி கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சியில் பனியில் உள்ள ஊழியர்கள் பயத்துடன் வேலை செய்யும் நிலை உள்ளது. மேலும் அந்த கட்டித்தில் பேரூராட்சி வாழ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள தெருவிளக்கு போஸ்டர்கள் கிருமிநாசினி பவுடர் போன்ற உபகரன பொருட்கள் பயன்படுத்தும் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்படாமல் பாதுகாப்பின்றி குப்பை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு மக்கள் வரிப்பணத்தை வீனாக்கும் பேரூராட்சி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுப்பதோடு இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை சீரமைப்பு செய்து பனியாளர்களை பாதுகாத்திட வேண்டியும் தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா தடுப்பிற்காக அரசால் வழங்கப்படுள்ள கிருமிநாசினி பொருட்களை பாதுகாப்புடன் வைத்து நோய்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி அப்பகுதி வாழ் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image