கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொய்யான தகவல்களை பரப்பி தண்டனைக்கு உள்ளாக வேண்டாம்:-மக்கள் சமுதாய விழிப்புணர்வு இயக்கம் எச்சரிக்கை..

கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொய்யான தகவல்களை பரப்பி தண்டனைக்கு உள்ளாக வேண்டாம்:-மக்கள் சமுதாய விழிப்புணர்வு இயக்கம் எச்சரிக்கை..

1. தேசிய பேரிடர் சட்டப்படி அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் உத்தரவுகளை மதிக்காமல் அவர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தால் ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும்.

2. பொய்யான அல்லது போலியான எச்சரிக்கைகள் கொடுத்தாள் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் கூடிய இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

3. பொய்யான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் கொடுத்தால் அல்லது பொய்யாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தால் அதற்கும் இரண்டு வருட சிறைத் தண்டனையும் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும்.*

4.பேரிடர் நிவாரணத்திற்காக பணம் வசூலித்து மோசடி செய்தாலும் இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் கூடிய இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்படும்.

எனவே தயவு செய்து பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் பரப்ப வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அரசாங்க உத்தரவுகளை மதித்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு.
மக்கள் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்.
சென்னை.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply