மதுரை மாநகராட்சியில் தீயணைப்பு படையுடன் இணைந்து கிருமி நாசினி தெளிப்பு..

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வரும் வேளையில், இன்று (25/03/2020) மதுரையில் ஒருவர் மரணமடைந்தது மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டும வகையில் மதுரை மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிக்கப்பட்னது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மதுரை மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து தீயணைப்பு வாகனம் மூலமாக தண்ணீருடன் கிருமிநாசினி கலந்து சாலை முழுவதும் தெளித்து தெளித்தனர்.

மேலும் இப்பணி தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் அடிக்கப்படும் என சுகாதார ஆய்வாளர் முருகன்  தெரிவித்தார். பொதுமக்கள் தேவையின்றி சாலையில் நடமாட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image