Home செய்திகள் இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோரை மீட்ட இருப்புப்பாதை காவல்துறையினர்

இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோரை மீட்ட இருப்புப்பாதை காவல்துறையினர்

by mohan

இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்கள்¸ மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் .சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் இருப்புப்பாதை காவல்துறை தலைவர் .வனிதா  மேற்பார்வையில்  நடைபெற்ற சோதனையில் சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள இரயில் நிலையங்களிலும்¸ இரயில்களிலும் தணிக்கையில் ஈடுபட்டு ஆதரவற்று சுற்றித்திரிந்த 136 ஆண்கள்¸ 16 பெண்கள் என மொத்தம் 152 நபர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு முடிவெட்டி¸ முகசவரம் செய்து குளிக்க வைத்து¸ புத்தாடை அணிவித்து¸ உணவு வழங்கி தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைத்தார்கள். அவர்களில் 2 நபர்களின் உறவினர்களை அடையாளம் கண்டு நல்ல முறையில் ஒப்படைத்தார்கள்.ரயில்வே காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!