உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சோகம். உறவினர்கள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ரெட்டியபட்டி சேர்ந்த பாண்டி மனைவி சங்கீதா (24). இவர் உசிலம்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை செய்த போது வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது. சங்கீதாவும் சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் – மருத்துவர்களின் அலட்சியமே இறப்புக்கு காரணம் எனக்கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவமறிந்த போலிசாா் மற்றும் கோட்டாச்சியா் சௌந்தா்யா தலைமையில் அதிகாாிகள் அவா்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு மறியலைக் கைவிடச் செய்தனா்.

உசிலை சிந்தனியா

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image