Home செய்திகள் இராமநாதபுரத்தில் சுகாதார செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

இராமநாதபுரத்தில் சுகாதார செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

by mohan

தமிழக அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு ஆகியன சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி மாவட்ட அமைப்புகள் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவி விமலா (ராமநாதபுரம்), சியா (பரமக்குடி) தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் மணிமேகலை, ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகப்பேறு திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும், ஊழியர்கள் மீது காணொளி காட்சி மூலம் சுகாதாரத் துறை செயலரால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல் ஒழுங்கு நடவடிக்கை முடிவுகளை அமல்படுத்தக்கூடாது, சமுதாய நல செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் இடையேயான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், தலைமை சுகாதார செவிலியரை சமுதாய நல அலுவலராக பதவி உயர் அளிக்க வேண்டும், செவிலியர்களுக்கு உதவியாளர் ஒருவர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. உண்ணா விரதப் போராட்டம் நிறைவிற்கு பின், இக்கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதென மாவட்ட தலைவி விமலா கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!