கீழக்கரையில் வாட்ஸ் அப் குழுமம் மூலம் பல பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகள்….

கீழக்கரை கிழக்குத்தெரு ஜமாஅத்திற்கு உள்பட்ட தாஜூல் அமீன், அய்யூப் கான் ஆகிய இருவரும் கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாஅத்தை சேர்ந்த சமூக நலனில் அக்கறையுள்ள பல அன்பர்களை இணைத்து, “நம்ம தெரு நட்பு” என்ற பெயரில் சமூக சேவையை கருதி வாட்ஸ் அப் குழுமத்தை ஆரம்பம் செய்து பல சகோதரர்களை இணைத்தனர். இந்ந குழுமத்தின் முக்கிய நோக்கம் மருத்துவம் செய்ய பொருளாதார வசதி அற்ற ஏழைகளை கண்டறிந்து உதவி செய்வது மற்றும் தன் வறுமையை வெளியில் சொல்லாமல் கஷ்டப்படும் ‘மௌன ஏழைகளை’ கண்டறிந்து உதவி செய்வது என்று தனது சமூக சேவையை செய்து வருகின்றார்கள். இந்த நம்ம தெரு நட்பு வாட்ஸ் அப் குழுமத்தின் மூலமாக ஏற்கனவே வடக்குத்தெருவைச் சேர்ந்த ஏழை பெண்மணிக்கு மருத்துவ உதவி வழங்கி இருக்கின்றார்கள்.

இந்த சிறப்பான சேவையில் கிழக்குத் தெருவைச் சேர்ந்த மிகவும் வறுமையில் இருக்கும் ஏழைகளை கண்டறிந்து உதவி செய்து வருகின்றார்கள். தற்போது வறுமையில் வாழும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உதவும் முகமாக நம்ம தெரு வாட்ஸ் அப் தளத்தில் உதவ வேண்டுகோள் கடந்த 23ம் தேதி அறிவிப்பு செய்தனர். இதன் அடிப்படையில் சுமார் ரூபாய் 2,64,100/=(இரண்டு லட்சத்தி அறுபத்தி நான்காயிரத்து நூறு) குழும உறுப்பினர்கள் பலர் கடந்த பத்து நாட்களில் வழங்கினார்கள்.

இது சம்பந்தமாக அறிமுக கூட்டத்திற்கு நம்ம தெரு நட்பு வாட்ஸ் அப் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கிழக்குத்தெரு பள்ளி அருகில் ஏற்பாடு செய்து அந்த தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அறிமுக விழாவில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாகீர் ஹீசைன், மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம், அதன் பொருளாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இது சம்பந்தமாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தாஜூல் அமீன், அய்யூப் கான் இருவரும் கூறுகையில், “இந்த வாட்ஸ் அப் குழுமம் முற்றிலும் ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஆரம்பம் செய்யப்பட்டது ஆகும். இந்த தளத்தில் எதற்காக பொருளாதார உதவி கோருகின்றோமே அதை தளத்தில் பதிவு செய்து அதற்கு மட்டுமே வழங்குவோம். உண்மையான ஏழைகளை கண்டறிந்து உதவி செய்வதே எங்கள் நோக்கம் ஆகும். இப்படி ஒரு பெரிய தொகையை ஏழ்மையில் வாடும் குடும்பத்தினர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் தொழில் தொடங்கவும், கடன் தொல்லையில் நீங்கவும், வீடு மராமத்து செய்யவும் மற்றும் அவர்களுக்கு இந்த தொகை பெரும் உதவியாக அமையும் இவர்களிடம் நாங்கள் மார்கத்திற்கு புறம்பாக இந்த பணத்தை செலவு செய்யக்கூடாது என்று வாக்குறுதி மட்டும் வாங்குவோம். இவர்களின் கண்ணியம் கருதி இவர்கள் பற்றிய விபரம் தளத்தில் அட்மீன்களான எங்களுக்கு மட்டுமே தெரியும்” என்றனர்.

இவர்களின் சேவை தொடர நாமும் வாழ்த்துவோம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image