Home செய்திகள் இராமநாதபுரம் அருகே ஊராட்சி தலைவருக்கான வேட்பாளர் தேர்வு தேர்தல்: எட்டு பேர் மீது வழக்கு

இராமநாதபுரம் அருகே ஊராட்சி தலைவருக்கான வேட்பாளர் தேர்வு தேர்தல்: எட்டு பேர் மீது வழக்கு

by mohan

இராமநாதபுரம் அருகே சுமைதாங்கி ஊராட்சியில் ஆனைகுடி, களரி, கீழச்சீத்தை, சுமைதாங்கி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. கடந்த சில காலங்களில் நடைபெற்ற ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. இதனால், இம்முறை 27/10/2019 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர்களில் போட்டியிட விரும்பும் ஒருவரை களமிறக்க வேட்பாளர் தேர்விற்கான தேர்தல் நடத்த கிராம தலைவர் முருகவேல், கிராம உதவியாளர் முருகவேல், கருப்பையா ஆகியோர் முடிவு செய்தனர்.தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நான்கு பேரில் ஒருவரை வேட்பாளராக தேர்வு கிராமத் தேர்தல் முறை சரியானது இறுதி முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, ராமையா, ராஜா, வீரகுமார், சேதுபாண்டி ஆகியோர் பெயர் , சின்னம் அச்சிட்ட வாக்குச்சீட்டு, முத்திரை கட்டை தயாரானது. இதனையடுத்து நேற்று காலை வாக்களிக்க சுமைதாங்கி கிராம மக்கள் ஆயத்தமாகினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். தேர்தலை தடுத்து நிறுத்தி வாக்குச் சீட்டு, வாக்குப் பெட்டி, முத்திரை கட்டைகளை பறிமுதல் செய்தனர். கிராம நிர்வாக அலுவலர் சித்ரா தேவி புகார் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சுமைதாங்கி கிராமத்தலைவர் முருகவேல், தண்டல் முருகவேல், கருப்பையா, வேட்பாளர்கள் ராமையா, ராஜா, வீரகுமார், சேதுபாண்டி, வாக்குச் சீட்டு அச்சிட்டு கொடுத்த அச்சக ஆப்ரேட்டர் சாத்தான்குளம் ராஜா ஆகியோர் மீது உத்திரகோசமங்கை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.டிச.27 ல் நடைபெறும் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சுமைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்வோம் என திட்டவட்டமாக கூறினர். மேலும் காவல் துறை தங்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளது என்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!