தென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம்-தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரை.!

தென்காசி புதிய மாவட்டம் இன்று உதயம்-தமிழக முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்து சிறப்புரை.!

தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இதில் தென்காசி மாவட்டத்திற்கான தொடக்க விழா இசக்கி மஹால் வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டத்தை இன்று (நவ.22) தொடங்கி வைக்கிறார். தொடக்க விழா நிகழ்ச்சி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு 33வது புதிய மாவட்டம் அமைகிறது. தென்காசி, சங்கரன்கோவில் இரு வருவாய் கோட்டங்களுடன், 8 தாலுகாக்களுடன் இம் மாவட்டம் உருவாகிறது.

இந்நிகழ்வில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்கிறார்

சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 ஆயிரம் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, உரையாற்றுகிறார். அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா, தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி எஸ்,பி., சுகுணாசிங் பங்கேற்கின்றனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image