தென்கரை பேரூராட்சியின் அலட்சியம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தென்கரை தேர்வு நிலை பேரூராட்சியின் அலட்சியத்தால் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பைகள் அல்லப்படாமலும், கழிவு நீர் சாக்கடைகள் சரிவரதூர் வாரப்படாமல் இருப்பதாலும் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு வருகின்றது. இப்பகுதியில் உள்ள முத்தையா சுவாமி திருக்கோவில் எதிரே  கழிவு நீர் வாய்க்காலில் விடப்படாமல் இருப்பதனால் கழிவு நீர் தேங்கி அதிக அளவில் துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் தொற்று ஏற்படுகின்றது. சமீபத்தில் பெய்த மழையால் இப் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

மேலும் மழை நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தி அதிகமாகி , கொசு உற்பத்திக் கூடாரமாக இப் பேரூராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. .இதேபோல் தாமரைக்குளம் பேருராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு நபிகள் நாயகம் தெரு மற்றும் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பாதசாரிகள், மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இவை சம்மந்தமாக தாமரைக்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களிடம் பொதுமக்களால் பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மக்களை வஞ்சிக்கும் தென்கரை தேர்வு நிலைபேரூராட்சி, மற்றும் தாமரைக்குளம் பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களது பிரச்சினைகளை சரி செய்ய இனியாவது முன் வருமா?

சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..