உசிலம்பட்டி அருகே மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டில் கணவன் குழந்தைகளுடன் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை.

உசிலம்பட்டி அருகே மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டில் கணவன் குழந்தைகளுடன் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மதுரை மாவட்;டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (35).இவர் உசிலம்பட்டி தனியார் பெட்ரோல் பல்க்கில் பணிபுரிந்து வருகிறார்.மனைவி கீதா (32).இவர்களுக்கு பிரதீபா (7) ஹேமலதா (6) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.கீதா தனது வீட்டின் முன்பே டீக்கடை வைத்துள்ளார்.கருப்பையாவுக்கும் கீதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் எனக்கூறப்படுகிறது.இந்நிலையில் இன்றும் வழக்கம் போல் தகராறு ஏற்பட மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.இதனால் மனமுடைந்த கருப்பையா தனது இரு மகள்களுடன் டீக்கடையின் உள்ளே கதவைப்பூட்டிக் கொண்டு சிலிண்டரை திறந்து வெடிக்கச் செய்துள்ளார்.வெடிச்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் போலிசாருக்குத் தகவல் கொடுத்தனர்.தீயணைப்புத்துறையினர் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று கதவை உடைத்து பார்த்தனர்.இதில் கருப்பையாவும் மகள் பிரதீபாவும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஹேமலதாவை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கீதாவைத் தேடி வருகின்றனர்.படுகாயமடைந்த மற்றுமொரு சிறுமி ஹேமலதா மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகள்கள் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image