காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு நிகழ்ச்சி

மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் பராசக்தி நகரில் நேற்று நடைபெற்ற காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் IPS., அவர்கள் தலைமையேற்று நடத்தி பொதுமக்களுக்கு சிறப்புரையாற்றினார். மதுரை மாநகரில் நடைபெறும் வழிப்பறி,திருட்டு, கொள்ளை போன்று குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க CCTV கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் அதன் மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்க முடியும்.

மதுரை மாநகரம் ஒரு முக்கியமான நகரமாகும். இந்நகரத்தில் காவல்துறையின் பணி மிகவும் முக்கியமானதாகும். இருபது லட்சம் மக்கள் வசிக்கின்ற இந்நகருக்கு பல லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு விமான நிலையம், உயர் நீதிமன்றம், தொழிற்சாலைகள் பலவும் உள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியை சிறப்பாக செய்வது காவல்துறையின் முக்கிய நோக்கம். பொதுமக்களின் ஒத்துழைப்பும் இதற்கு மிக மிக அவசியம்.பல பகுதிகளில் CCTV கேமரா வைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

குற்றவாளிகள் உள்ளுரில் இருந்தோ அல்லது வெளியூரில் இருந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடலாம்.இப்பகுதியில் 68 தெருக்கள் உள்ளன. அவனியாபுரத்தில் உள்ள காவலர் எண்ணிக்கையே 60 பேர்தான். பல இடங்களில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து CCTV கேமரா பொருத்தியுள்ளனர் அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.அவனியாபுரம் பகுதிகளில் உள்ள 18 முக்கிய சந்திப்புகளில் CCTV கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது.

CCTV கேமராக்களை பொருத்தம் செய்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு உயரும் குற்ற சம்பவங்களும் குறையும். திருப்பரங்குன்றம் பகுதியில் ரோந்து பணி தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே குற்ற சம்பவங்களைமுன்கூட்டியும் மற்றும் முற்றிலும் தடுக்க முடியும்.இளைஞர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது மன வருத்தத்தை அளிக்கின்றது. மதுரை மாநகரில் நடைபெறும் ஒவ்வொரு குற்றச்சம்பவங்களிலும்6 இளைஞர்களுக்கு குறையாமல் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம் தவறான நட்பு, போதை பழக்கத்திற்கு அடிமையாதலே. ஆகவே அவர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் நடத்தி வேலை வாய்ப்பு பெற்றுத்தர காவல் துறை தயாராக உள்ளதாகவும் இந்நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image