நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆனந்தப் பூங்காற்று கவிதை நூல் வெளியீட்டு விழா

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது.கவிஞர் ஈஸ்வரமூர்த்தி எழுதிய ஆனந்தப் பூங்காற்று என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா முன்னிலை வகித்தார்.நூலாசிரியரின் மனைவி நூலை வெளியிட நூலின் முதல் படியை நெல்லை வானொலி நிலைய அறிவிப்பாளர் உமா கனகராஜ் பெற்றுக்கொண்டார். வானொலி நிலைய அறிவிப்பாளர் கவிப் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினர். தலைமையுரை வழங்கிய அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி பேசுகையில்”தமிழ் மற்றும் தமிழ்ப் பண்பாடுகளைப் போற்றிட அரசு அருங்காட்சியகமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து பல நிகழ்வுகளை நடத்திவருகிறது.

அதன் நீட்சியாக கவிஞர் ஈஸ்வரமூர்த்தியின் கவிதை நூல் வெளியீட்டு விழா அருங்காட்சியகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது”என்றார்.முன்னிலை வகித்த கவிஞர் பேரா தனது உரையில்”தொன்மையான நம் தமிழ் மொழியில் புதுப் புது கவிஞர்களின் வருகை பெருமையை தருகிறது.கவிதையால் தமிழை அழகுப் படுத்தும் ஈஸ்வரமூர்த்தி போன்ற கவிஞர்களை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்.”இளம் படைப்பாளிகளின் களம்”என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து இளம்/புதிய படைப்பாளிகளின் படைப்புகளை முன்னெடுக்கும் பணியில் தொடர்ந்து பயணிப்போம்.”எனக் குறிப்பிட்டார். முன்னதாக உக்கிரன் கோட்டை மணி வரவேற்புரை வழங்கினார்.முனைவர் மனோகரன் தொகுத்து வழங்கினார். வானொலி நேயர்கள் திரளாக கலந்து கொண்டு கவிஞரைப் பாராட்டினர். கவிஞர் சுப்பையா ஒளிப்படங்களைத் தொகுத்துத் தந்தார்.கவிஞர்களின் கவிதைகள் வாசிக்கப்பட்டு இனிதே விழா நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image