போடியில் உள்ள ஈஸ்டன் மசாலா நிறுவன குடோனில் தீ

தேனி மாவட்டம் போடி சாலையில் அமைந்துள்ள கோடாங்கிபட்டி என்ற இடத்தில் தனியார் மசாலா ஈஸ்டன்) கம்பெனி இன்று 14.10.19 காலை சரியாக ஒன்பது மணி அளவில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது .இதனை அணைக்க தேனி மற்றும் போடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தனியார் தண்ணி வாகனங்களும்  தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருகிறார்கள். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் இயந்திரங்களும் சேதம் அடைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது .தீ விபத்து குறித்து பழனி செட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..